4 பில்லியன் ரூபா இலாபப்பங்கு மோசடி; இரு நிறுவனப் பணிப்பாளர்கள் கைது

இலாபப்பங்கு வழங்குவதாக உறுதியளித்து, சுமார் 2,000 முதலீட்டாளர்களிடமிருந்து கிட்டத்தட்ட 4 பில்லியன் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில், இரண்டு தனியார் நிறுவனங்களின் இரு பணிப்பாளர்கள் நவம்பர் 20ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மற்றும் வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், குறித்த நிறுவனங்களின் மூன்று பணிப்பாளர்களில் இருவரைக் கைது செய்தனர். இந்நிறுவனங்கள் கண்டி மற்றும் கொஹுவளையில் அமைந்துள்ளன.
இந்நிறுவனங்கள் தொடர்பில் இதுவரை 80 முறைப்பாடுகளை திணைக்களம் பெற்றுள்ளது. மேலதிக விசாரணைகள் தொடரும் நிலையில், சந்தேகநபர்கள் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.