எம்மைப் பற்றி
இலங்கைச் செய்திகள் ஒரே இடத்தில்
FindAllNews.lk, இலங்கையின் மூன்று மொழிகளிலும் (சிங்களம், தமிழ், ஆங்கிலம்) வெளியாகும் 20 ஊடகங்களின் செய்திகளை ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கிறது. ஒரே நிகழ்வு தொடர்பான செய்திகள் ஒன்றாகத் தொகுக்கப்படுகின்றன. இதனால், செய்திகளைப் பின்தொடர்வதும், அவை வெவ்வேறு ஊடகங்களிலும் மொழிகளிலும் எவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன என்பதை ஒப்பிடுவதும் உங்களுக்கு இலகுவாகிறது.
இத்தளம் மூன்று மொழிகளிலுமான செய்திகளை ஒருங்கிணைப்பது மட்டுமன்றி, செய்தி எந்த மொழியில் வெளியானாலும், அதன் தலைப்புச் செய்திகளையும் சுருக்கங்களையும் வாசகர்களுக்கு விருப்பமான மொழியில் (சிங்களம், தமிழ் அல்லது ஆங்கிலம்) வழங்குகிறது.
இது எவ்வாறு செயற்படுகிறது
சேகரிக்கிறோம்
ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மொழிகளில் வெளியாகும் 20 ஊடகங்களின் செய்திகள் தொடர்ந்து சேகரிக்கப்படுகின்றன. ஒரே நிகழ்வு தொடர்பான செய்திகள் ஒரே செய்தியாகத் தொகுக்கப்படுகின்றன.
தரவரிசைப்படுத்துகிறோம்
நாம் கண்காணிக்கும் 20 ஊடகங்களில் ஒரு செய்தி எந்தளவுக்குப் பரவலாக வெளியிடப்பட்டுள்ளது என்பதன் அடிப்படையில் செய்திகள் தரவரிசைப்படுத்தப்படுகின்றன. “அதிகம் வெளியிடப்பட்டவை” போன்ற தரவரிசைகள், ஒரு செய்தியை வெளியிட்ட ஊடகங்களின் எண்ணிக்கையையே காட்டுகின்றன; அச்செய்தியின் முக்கியத்துவத்தையோ துல்லியத்தையோ அல்ல.
சுருக்கமாக்குகிறோம்
செய்திகளின் சுருக்கங்களை உருவாக்க இயந்திர நுண்ணறிவு (machine intelligence) பயன்படுத்தப்படுகிறது.
மொழிபெயர்க்கிறோம்
தலைப்புச் செய்திகளும் சுருக்கங்களும் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் வழங்கப்படுகின்றன. இதனால், மூன்று மொழிகளிலும் வெளியாகும் செய்திகளைப் பயனர்கள் தமக்கு விருப்பமான மொழியில் பின்தொடரலாம்.
இணைப்புகளை வழங்குகிறோம்
ஒவ்வொரு செய்தியும் மூலச் செய்திகளுக்கான இணைப்புகளுடன் காண்பிக்கப்படுகிறது. இதன் மூலம், மூலச் செய்திகளை வெளியிட்ட நிறுவனங்களின் இணையத்தளங்களுக்கு வாசகர்கள் வழிநடத்தப்படுவதோடு, பயனர்கள் செய்திகளை அவற்றின் மூலத்திலிருந்தே நேரடியாக வாசிக்கவும் முடிகிறது.
கண்காணிக்கப்படும் ஊடகங்கள்
- ஆங்கிலம் (9)
- டெய்லி FT, டெய்லி மிரர், தி ஐலண்ட், சன்டே ரைம்ஸ், எகனமிநெக்ஸ்ட், நியூஸ் ஃபெர்ஸ்ட், டெய்லி நியூஸ், சன்டே ஒப்சேவர், தி மோர்னிங்
- சிங்களம் (6)
- ஹிரு செய்திகள், லங்காதீப, திவயின, அத தெரண சிங்களம், அருண, தினமின
- தமிழ் (5)
- வீரகேசரி, தமிழ் மிரர், தமிழன், லங்காசிறி, தினகரன்
நாம் யார்
FindAllNews.lk தளத்தை, வெரிட்டே ரிசேர்ச் (Verité Research) நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (AI) ஆய்வு மற்றும் அபிவிருத்திப் பிரிவான வெரிட்டே இன்டெலிஜென்ஸ் (Verité Intelligence) உருவாக்கியுள்ளது.
வெரிட்டே ரிசேர்ச், இலங்கையின் மிகப்பெரிய சுயாதீன சிந்தனைக் குழாம் (think tank) ஆகும். பொருளாதாரம், சட்டம் மற்றும் ஆட்சிமுறை, ஊடகம் மற்றும் அரசியல் ஆகிய துறைகளில் பல்துறை ஆய்வுகளையும் அறிவுத் தளங்களையும் இந்நிறுவனம் உருவாக்கி வருகிறது.
ஏதேனும் கேள்விகள் உள்ளனவா? அல்லது எம்முடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறீர்களா? வெரிட்டே இன்டெலிஜென்ஸ் குழுவைத் தொடர்புகொள்ளுங்கள்: FindAllNews@veriteresearch.org.