பொறுப்புத் துறப்பு
இயந்திர நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் சுருக்கங்களும் மொழிபெயர்ப்புகளும்
FindAllNews.lk தளம், செய்திகளைச் சுருக்கமாக்குவதற்கும், சிங்களம் மற்றும் தமிழ்ச் செய்திகளை ஆங்கிலத்துக்கும், ஆங்கிலச் செய்திகளைச் சிங்களம் மற்றும் தமிழுக்கும் மொழிபெயர்ப்பதற்கும், பாரிய மொழி மாதிரிகளை (large language models) அடிப்படையாகக் கொண்ட இயந்திர நுண்ணறிவை (machine intelligence) பயன்படுத்துகிறது. செய்திச் சுருக்கங்களின் துல்லியத்தையும், உள்நாட்டு மொழிகளிலிருந்து செய்யப்படும் மொழிபெயர்ப்புகள் சூழலுக்குப் பொருத்தமாக அமைவதையும் மேம்படுத்தும் வகையில், வெரிட்டே இன்டெலிஜென்ஸ் கவனமாக உருவாக்கி நிரலாக்கம் செய்த தரவுகள் மற்றும் செம்மைப்படுத்தல்களின் அடிப்படையில் இம்மாதிரிகள் வழிநடத்தப்படுகின்றன. இருப்பினும், அவை உருவாக்கும் உள்ளடக்கத்தில் விடுபட்ட விவரங்கள், தகவல்களின் சூழல் தொடர்பான தவறான விளக்கங்கள், எண்ணியல் தவறுகள், மொழிபெயர்ப்புப் பிழைகள் உள்ளிட்ட தவறுகள் இருக்கக்கூடும். அத்துடன், இயந்திர நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் உள்ளடக்கம், மூலச் செய்திகளில் இடம்பெறாத கூற்றுகள் உள்ளிட்ட தகவல்களைத் தற்செயலாகச் சேர்க்கக்கூடும்.
FindAllNews.lk தளத்தில் வழங்கப்படும் தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. இத்தகவல்களின் துல்லியத்துக்கும் முழுமைக்கும் FindAllNews.lk உத்தரவாதம் அளிக்கவில்லை. இத்தகவல்களில் தங்கியிருப்பது வாசகரின் சொந்தப் பொறுப்பிலேயே ஆகும். எனவே, இத்தளத்திலுள்ள உள்ளடக்கத்தில் தங்கியிருப்பதால் ஏற்படும் அனைத்துப் பொறுப்புகளையும் கடப்பாடுகளையும் FindAllNews.lk நிராகரிக்கிறது. சுருக்கங்களுடன் இணைக்கப்பட்டுள்ள மூலச் செய்திகளைப் பார்வையிட்டு, முக்கியமான தகவல்களைச் சரிபார்த்துக்கொள்ளுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இயந்திர நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் சுருக்கங்களும் மொழிபெயர்ப்புகளும் செய்திகளைப் புரிந்துகொள்வதற்கான உதவியாகவே வழங்கப்படுகின்றன; அவற்றை மூலச் செய்திகளுக்கான மாற்றீடாகக் கருதக்கூடாது.
மூன்றாம் தரப்பு உள்ளடக்கம்
தெரிவுசெய்யப்பட்ட செய்தி ஊடகங்களில் வெளியிடப்படும் செய்திக் கட்டுரைகள், தலைப்புச் செய்திகள், படங்கள் ஆகியவற்றை FindAllNews.lk சொந்தமாகக் கொண்டிருக்கவோ கட்டுப்படுத்தவோ இல்லை. மூலச் செய்திகளின் உள்ளடக்கத்துக்கு அந்தந்தச் செய்தி ஊடகங்களே பொறுப்பாகும். FindAllNews.lk மூலச் செய்திகளுக்கான இணைப்புகளை வழங்குகிறது; ஏனைய செய்தி ஊடகங்களின் முழுமையான கட்டுரைகளை வெளியிடுவதில்லை. FindAllNews.lk தளத்திலுள்ள உள்ளடக்கம், FindAllNews.lk அல்லது வெரிட்டே ரிசேர்ச் நிறுவனத்தின் கருத்தையோ அங்கீகாரத்தையோ பிரதிபலிப்பதில்லை.
FindAllNews.lk தளத்தில் மூல இணையத்தளங்களுக்கான இணைப்புகள் உள்ளபோதிலும், அந்த இணையத்தளங்களின் உள்ளடக்கம், அவை கிடைக்கும் தன்மை, அவற்றின் தனியுரிமை நடைமுறைகள் ஆகியவற்றுக்கும், அவை தனிப்பட்ட தரவுகளைச் சேகரிப்பதற்கும் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்துவதற்கும் FindAllNews.lk தளமோ வெரிட்டே ரிசேர்ச் நிறுவனமோ பொறுப்பேற்காது.
செய்தி வெளியீடும் தரவரிசைகளும்
FindAllNews.lk தளத்திலுள்ள “அதிகம் வெளியிடப்பட்டவை” போன்ற தரவரிசைகள், கண்காணிக்கப்படும் 20 செய்தி ஊடகங்களில் எத்தனை ஊடகங்கள் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளன என்பதைக் குறிக்கின்றன. எனவே, அவை ஒரு செய்தி எந்தளவுக்குப் பரவலாக வெளியிடப்பட்டது என்பதையே காட்டுகின்றன; அச்செய்தி எவ்வளவு முக்கியமானது அல்லது துல்லியமானது என்பதை அல்ல. இத்தரவரிசைகள், நாம் கண்காணிக்கும் 20 செய்தி ஊடகங்களை அடிப்படையாகக் கொண்டவை; அவற்றுக்கு மட்டுப்படுத்தப்பட்டவை.
மேலதிக தகவல்களுக்கு, வெரிட்டே இன்டெலிஜென்ஸ் குழுவைத் தொடர்புகொள்ளுங்கள்: FindAllNews@veriteresearch.org
எம்மைத் தொடர்புகொள்ள