டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்திற்கு எதிராக வசந்த முதலிகே மனுத்தாக்கல்

ஜனநாயகப் போராட்டச் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே, அரசாங்கத்தின் டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்திற்கு சவால் விடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
நாட்டின் வயதுவந்த சனத்தொகையின் உயிரியல் தரவுகளை (biometric data) இந்திய நிறுவனமொன்றிற்கு வழங்குவதன் மூலம் இத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கான முடிவுக்கு இந்த மனு சவால் விடுக்கிறது.
அமைச்சரவை உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளது.