இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 71 கிலோ ஹெரோயினுடன் இருவர் சென்னையில் கைது

இலங்கைக்கு கடத்துவதற்காகத் தயாரிக்கப்பட்ட 71 கிலோகிராம் ஹெரோயினுடன் இரு சந்தேகநபர்களை இந்தியாவின் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் சென்னையில் கைது செய்துள்ளது.
சர்வதேச போதைப்பொருள் கடத்தலை இலக்கு வைத்து நவம்பர் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன. அதிகாரிகள் சென்னையில் சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்றையும், அதனுடன் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றையும் வழிமறித்து, வெள்ளை நிறப் பொடி அடங்கிய 69 பொட்டலங்களை மீட்டுள்ளனர்.
இந்த போதைப்பொருட்கள் திருச்சிராப்பள்ளி வழியாக கடல் மார்க்கமாக இலங்கைக்கு அனுப்ப திட்டமிடப்பட்டிருந்தது. இந்த ஆண்டு இதுவரை நாட்டில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல் இது என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.