லக்சம்பேர்க் சமையல் உலகக் கிண்ணப் போட்டிக்கு இலங்கை சமையற்கலைஞர் குழாம் புறப்பட்டது

இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி லக்சம்பேர்க்கில் நடைபெறும் 2026 சமையல் உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை சமையற்கலைஞர் குழாமைச் சேர்ந்த 15 பேர் கொண்ட குழுவினர் நவம்பர் 18ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டனர்.
நாடளாவிய ரீதியில் நட்சத்திர ஹோட்டல்களில் பணிபுரியும் சமையற்கலைஞர்கள் இந்தக் குழுவில் அடங்குவர்.
உலக சமையற்கலைஞர் சங்கத்தினால் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை ஏற்பாடு செய்யப்படும் இப்போட்டி நவம்பர் 20ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை எட்டுப் பிரிவுகளில் நடைபெறவுள்ளது. 80 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 4,000 சமையற்கலைஞர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.