டெய்லி நியூஸ் முன்னாள் ஆசிரியர் மாணிக்க டி சில்வா தனது ஊடகத்துறைப் பணி குறித்து நினைவுகூர்ந்தார்

84 வயதை எட்டிய டெய்லி நியூஸ் முன்னாள் ஆசிரியர் மாணிக்க டி சில்வா, 1981 முதல் 1995 வரை பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றிய காலப்பகுதி உட்பட தனது ஊடகத்துறைப் பணி குறித்து நினைவுகூர்ந்தார்.
1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னர் தலைவர் ரஞ்சித் விஜேவர்தனவின் கீழ் லேக் ஹவுஸின் அரசியல் பங்கு குறித்து அவர் நினைவு கூர்ந்தார். அத்துடன், அப்போதைய ஆளுநர் நாயகம் சேர் ஒலிவர் குணதிலக்க சம்பந்தப்பட்ட சண்டே ஒப்சேவர் பத்திரிகையின் முதல் பக்கச் செய்தி தொடர்பில் முன்னாள் ஆசிரியர் டென்சில் பீரிஸைப் பாராட்டினார்.
ஒரு நீதிபதி குறித்த அறிக்கை தொடர்பில் ஐவர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வினால் நீதிமன்ற அவமதிப்புக்காகத் தான் தண்டிக்கப்பட்டதையும் டி சில்வா நினைவு கூர்ந்தார். அவர் சிறைத்தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்ட போதிலும், பின்னர் ஆசிரியர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு இராஜினாமா செய்யுமாறு கோரப்பட்டார்.