தமிழின் ‘வருவாய்’ பாடல் முதல் தடவையாக கிராமி விருதுக்குப் பரிந்துரை

பாடகர்-இசையமைப்பாளர் தேவன் ஏகாம்பரம் மற்றும் பாடகி சுபிக்ஷா ரங்கராஜன் ஆகியோரால் உருவாக்கப்பட்ட ‘வருவாய்’ என்ற தமிழ்ப் பாடல் கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒரு தமிழ்ப் பாடல் இந்த விருதைப் பெறுவது இதுவே முதல் தடவையாகும்.
பாரதியார் பாடலை அடிப்படையாகக் கொண்ட இப்பாடல், 2027 பெப்ரவரி 7 ஆம் திகதி லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள 68ஆவது கிராமி விருதுகளுக்கான இந்தியாவின் ஒரே பரிந்துரையாகும். இதற்கான பரிந்துரைகள் 2026 நவம்பர் 16 ஆம் திகதி அறிவிக்கப்பட்டன.
ஷகிரா, ஃபாரெல் வில்லியம்ஸ், ஏஞ்சலிக் கிட்ஜோ மற்றும் பர்னா பாய் உள்ளிட்ட சர்வதேச கலைஞர்களின் படைப்புகளுடன் இப்பாடல் போட்டியிடும்.
1998 ஆம் ஆண்டு முதல் சுயாதீன தமிழ்ப் பாடல்களைத் தயாரித்து வரும் ஏகாம்பரம், இந்த பரிந்துரை தனது 29 வருட பயணத்தில் ஒரு நிறைவான தருணம் என்றும், தமிழுக்கும், பாரதியாருக்கும், கர்நாடக இசைக்கும் இது ஒரு சிறப்புச் சாதனை என்றும் தெரிவித்தார்.