திமிரிகொட பொலிஸ் உத்தியோகத்தர்கள் 14 பேர் திடீர் சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதி

திமிரிகொட பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்ட 14 உத்தியோகத்தர்கள் பல நாட்களாக காய்ச்சல் மற்றும் தோல் தொற்றுநோயால் திடீரென சுகவீனமடைந்ததையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு வடக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களில் ஒரு பிரதான பொலிஸ் பரிசோதகர், மூன்று பொலிஸ் சார்ஜன்ட்கள், ஒன்பது பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் ஒரு பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் அடங்குவர். 14 உத்தியோகத்தர்களும் ஆரம்பத்தில் சிகிச்சைக்காக நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
பெண் பொலிஸ் கான்ஸ்டபிளின் நிலை மோசமடைந்ததையடுத்து மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.