மாஸ்கெலியா சென். ஜோசப் கல்லூரியின் 36 மாணவர்கள் சுவாசப் பிரச்சினைகளுடன் வைத்தியசாலையில் அனுமதி

மாஸ்கெலியா சென். ஜோசப் தேசிய கல்லூரியின் ஆரம்பப் பிரிவு மாணவர்கள் 36 பேர் சுவாசப் பிரச்சினைகள் காரணமாக நவம்பர் 20 அன்று மாஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காலை 8:45 மணிக்கு காலை உணவை உட்கொண்ட பின்னர் மாணவர்கள் தங்கள் வகுப்பறையில் சுவாசப் பிரச்சினைகளை எதிர்கொண்டனர்.
சிகிச்சை பெற்ற பின்னர் 30 மாணவர்கள் வீடு திரும்பியுள்ளனர், எஞ்சிய ஆறு பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.