வீர மொனராவில கெப்பட்டிப்பொல நிலமேவின் 208ஆவது நினைவு தினம் ஸ்ரீ தலதா மாளிகையில் அனுஷ்டிப்பு

வீர மொனராவில கெப்பட்டிப்பொல நிலமேவின் 208ஆவது நினைவு தினம் நவம்பர் 26ஆம் திகதி ஸ்ரீ தலதா மாளிகையின் மகாமலுவவில் அமைந்துள்ள கெப்பட்டிப்பொல நினைவுச் சின்னத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
தியவடன நிலமே பிரதீப் நிலங்க தெலவின் வழிகாட்டலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வுக்கு மத்திய மாகாண ஆளுநர் கலாநிதி ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ தலைமை தாங்கினார். “மதக வஸ்திர பூஜை”யும் நடத்தப்பட்டது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் ரோஹித தஸநாயக்க நினைவுப் பேருரையை நிகழ்த்தினார்.
மகா சங்கத்தினர், பஸ்நாயக்க நிலமேக்கள், அரச அதிகாரிகள், பாதுகாப்புப் படையினர் பிரதிநிதிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் கெப்பட்டிப்பொல மற்றும் மடுகல்ல திசாவவின் குடும்ப உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.