கொழும்பு தேசிய கலைக்கூடம் புனரமைப்பு: அமைச்சு சிரமதானம்

கொழும்பிலுள்ள தேசிய கலைக்கூடத்தை பொதுமக்களுக்காக மீண்டும் திறப்பதற்கு முன்னதாக, புனரமைக்கும் நோக்கில், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு நவம்பர் 28ஆம் திகதி சிரமதானமொன்றை நடத்தியது.
பிரதி அமைச்சர் கமகேதர திசாநாயக்க மற்றும் கட்புலக் கலைகள் உபகுழுவின் தலைவர் பிரகீத் ரத்நாயக்க ஆகியோர் பல்வேறு மூத்த கலைஞர்களுடன் இந்த முயற்சியில் கலந்துகொண்டனர்.
கலைஞர்களான வின்னி ஹெட்டிகொட, எஸ்.எச்.சரத், சஞ்சீவ குமார, வஜிர குணவர்தன, புலஸ்தி எதிரிவீர மற்றும் புகைப்படக் கலைஞர் சரத் பெரேரா ஆகியோர் பங்கேற்றவர்களில் அடங்குவர். இந்தக் கலைக்கூடம் நீண்டகாலமாக மூடப்பட்டிருந்தது.