ஐரிஷ் நகைச்சுவையாளர், ஊடகவியலாளர் பி.ஜே.கலகர் 51 ஆவது வயதில் காலமானார்

ஐரிஷ் நகைச்சுவையாளரும் ஊடகவியலாளருமான பி.ஜே.கலகர் 51 ஆவது வயதில் காலமானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவரது மரணத்திற்கான காரணம் வெளியிடப்படவில்லை, மேலும் அவரது குடும்பத்தினரின் தனியுரிமையை அவரது நிறுவனம் கோரியுள்ளது.
கலகர் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தொலைக்காட்சி, வானொலி மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் பணியாற்றினார். 2005 ஆம் ஆண்டு வெளியான “நேக்கட் கெமரா” தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் அவர் புகழ் பெற்றார், 2007 இல் ஐரிஷ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி அகாடமி விருதை வென்றார், மேலும் பிபிசி தொடரான “தி யங் ஒஃபெண்டர்ஸ்” இல் தோன்றினார்.
மனநலப் பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாகப் பேசியதற்காகவும், விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காகவும் அவர் அங்கீகரிக்கப்பட்டார். ஐரிஷ் பிரதமர் மைக்கேல் மார்ட்டின், ஏனைய அரசியல்வாதிகள் மற்றும் கலைஞர்களுடன் இணைந்து அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.