இலங்கையின் யானைகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை மேன்முறையீட்டு நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது

இலங்கையின் யானைகளைப் பாதுகாப்பதற்கு விசேட முக்கியத்துவம் அளிப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளதுடன், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெரிய கட்டிடங்களைப் பார்ப்பதற்காக நாட்டிற்கு வருவதில்லை எனவும் அவதானித்துள்ளது.
இலங்கை வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்கம் தாக்கல் செய்த மனுவை செவ்வாய்க்கிழமை பரிசீலித்த போதே நீதிமன்றம் இந்த அவதானிப்புகளை மேற்கொண்டது.