பிரதமர் ஹரிணி அமரசூரிய உலக வங்கி நிறைவேற்றுப் பணிப்பாளர் நீல்காந்த் மிஸ்ராவைச் சந்தித்தார்

இலங்கையின் பொருளாதார நிலைமை, தற்போதைய சீர்திருத்தங்கள் மற்றும் அபிவிருத்தி முன்னுரிமைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நீல்காந்த் மிஸ்ரா, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார்.
பிரதமர் ஊடகப் பிரிவின்படி, நல்லாட்சிக் கோட்பாடுகளின் கீழ் டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் நிறுவன வலுவூட்டல் ஆகியவற்றை அரசாங்கத்தின் முன்னுரிமைகளாக அமரசூரிய எடுத்துரைத்ததுடன், பொருளாதார வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கியதாகவும் நிலையானதாகவும் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
வளர்ச்சியை உந்துவதில் தனியார் துறையின் முக்கிய பங்கையும், வணிகங்களுக்கு அதிகாரமளிப்பதன் அவசியத்தையும் மிஸ்ரா வலியுறுத்தினார். மேலதிக செயலாளர் சாகரிகா போகாவத்த மற்றும் வெளிநாட்டு வளங்கள் திணைக்கள அதிகாரிகள் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.