பராக்ரம நிரெல்லவின் 'செக்கு' நாடகம் நவம்பர் 28 அன்று பொன்விழா காண்கிறது

மூத்த நாடக ஆசிரியர் பராக்ரம நிரெல்லவின் 'செக்கு' நாடகம் அதன் பொன்விழாவைக் குறிக்கும் வகையில் நவம்பர் 28 அன்று பொரளை நாமல் மாலினி புஞ்சி தியேட்டரில் மேடையேற்றப்படவுள்ளது.
இந்த அரசியல் நையாண்டி நாடகத்தின் இரண்டு காட்சிகள் பி.ப. 3.30 மணிக்கும் பி.ப. 6.45 மணிக்கும் நடைபெறும்.
1976 ஆம் ஆண்டில் சிறந்த நாடகத்திற்கான விருதை வென்றதும், பாடசாலைக் காட்சிகளுக்கு அங்கீகரிக்கப்பட்டதுமான இந்த நாடகம் 50 ஆண்டுகளாக மேடையேற்றப்பட்டு வருகிறது.
பொன்விழா நிகழ்வின் போது 1976 ஆம் ஆண்டில் 'செக்கு' நாடகத்திற்குப் பங்களித்த கலைஞர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.