சமையல் உலகக் கிண்ணப் போட்டி 2026 இல் இலங்கை சமையல் குழு 33 விருதுகளை வென்றது

லக்ஸம்பேர்க்கில் உள்ள லக்ஸ்எக்ஸ்போ கண்காட்சி நிலையத்தில் நடைபெற்ற சமையல் உலகக் கிண்ணப் போட்டி 2026 இல் இலங்கை சமையல் குழு 33 விருதுகளை வென்றது.
அணி ஆறு தங்கப் பதக்கங்கள், 14 வெள்ளிப் பதக்கங்கள், எட்டு வெண்கலப் பதக்கங்கள் மற்றும் ஐந்து டிப்ளோமா சான்றிதழ்களைப் பெற்றது.
ஒக்டோபர் 20 முதல் 27 வரை எட்டு பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியில் ஐந்து கண்டங்களைச் சேர்ந்த 55 நாடுகளிலிருந்து 2,500 இற்கும் மேற்பட்ட சமையல்காரர்களும் போட்டியாளர்களும் கலந்துகொண்டனர்.
அதிகாரபூர்வ விமானப் பங்காளரான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், தீவுக்குத் திரும்பும் வழியில் 35,000 அடி உயரத்தில் விமானக் குழுவினருடன் கேக் வெட்டி வெற்றியை கொண்டாடிய குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்தது.