சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து முஷ்பிகுர் ரஹீம் ஓய்வு: பெப்ரவரி இங்கிலாந்து போட்டியுடன் விடைபெறுகிறார்

முன்னாள் பங்களாதேஷ் கிரிக்கெட் அணித் தலைவர் முஷ்பிகுர் ரஹீம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறத் தீர்மானித்துள்ளார்.
அவரது இறுதி டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு பெப்ரவரி 14ஆம் திகதி இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ளது. ரஹீம் தனது முடிவை பங்களாதேஷ் கிரிக்கெட் குழுவின் தலைவர் தமிம் இக்பாலுக்கு அறிவித்துள்ளார்.
ரஹீம் ஏற்கனவே ஒருநாள் சர்வதேச மற்றும் இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டதாக விளையாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.