ஆசிய சம்பியன்ஷிப் போட்டித் தொடரை அடுத்து வலைப்பந்து அணி குறித்து விசாரணைக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உத்தரவு
ஹொங்கொங்கில் நடைபெற்ற 2026 ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கை தேசிய வலைப்பந்து அணியின் ஏமாற்றமளிக்கும் செயற்பாட்டை அடுத்து, விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே விசேட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஆறு தடவைகள் ஆசிய சம்பியன் பட்டம் வென்ற அணியின் 12 வீராங்கனைகளிடமும் முகாமைத்துவக் குறைபாடுகள், சர்ச்சைக்குரிய தெரிவு முடிவுகள் மற்றும் உள்ளகப் பிரச்சினைகள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகின்றன.