அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளின் சுற்றுப்பயணங்களுக்கான கேள்விப்பத்திரத்தில் பந்தய நிறுவனங்களை இலங்கை கிரிக்கெட் சபை விலக்கியது

இணையவழி பந்தயம் மற்றும் சூதாட்டத் தொழில்துறையுடனான தனது வணிகத் தொடர்புகளைத் துண்டிக்க இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளின் வரவிருக்கும் சுற்றுப்பயணங்களுக்கான சமீபத்திய கேள்விப்பத்திரத்தில் பந்தயம் தொடர்பான நிறுவனங்கள் பங்கேற்பதை சபை வெளிப்படையாகத் தடை செய்தது.