பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாள் பிரச்சாரத்தை நவம்பர் 25 அன்று இலங்கை ஆரம்பிக்கவுள்ளது

பாலின அடிப்படையிலான வன்முறையை ஒழிப்பதற்கான 16 நாள் தேசிய நிகழ்ச்சித்திட்டம் நவம்பர் 25 முதல் டிசம்பர் 10 வரை “நீதியே எனது உரிமை – பாலின அடிப்படையிலான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிணைவோம்” என்ற தொனிப்பொருளில் நடைபெறவுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சவித்திரி பவுல்ராஜ் அறிவித்துள்ளார்.
வன்முறைகளைக் கையாள்வதற்கும், சட்ட தாமதங்களைக் குறைப்பதற்கும், சிறுவர் துஷ்பிரயோகத்திற்காக தண்டிக்கப்பட்டவர்களின் பட்டியலை பொலிஸ் நிலையங்கள் மூலம் பகிரங்கப்படுத்துவதற்கும் புதிய சட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக பவுல்ராஜ் தெரிவித்தார்.
ஆதரவு நடவடிக்கைகளில் நிதி உதவி, பராமரிப்பு நிலையங்களில் உள்ள பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான உளவியல் ஆலோசனை, மற்றும் பாடசாலை இடைவிலகியவர்களை மீண்டும் இணைப்பதற்கான வழிமுறைகள் என்பன அடங்கும்.
1938 மற்றும் 1929 ஆகிய அவசர தொலைபேசி இலக்கங்கள் மூலம் சம்பவங்களை இலவசமாகப் புகாரளிக்கலாம், ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் ஐந்து அமைச்சு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.