கினிகத்தேனையில் பஸ் மீது பாறை விழுந்ததில் பயணி ஒருவர் பலி, இருவர் காயம்

கினிகத்தேனையில் களுக்கல்ல பொலிஸ் சோதனைச் சாவடிக்கு அருகில் ஹட்டனில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் மீது நவம்பர் 28 அன்று மலையிலிருந்து பாறை விழுந்ததில் ஒரு பயணி உயிரிழந்ததுடன் மேலும் இருவர் காயமடைந்தனர்.
ஹட்டன் டிப்போவுக்குச் சொந்தமான அந்த பஸ் பலத்த சேதமடைந்தது. உயிரிழந்தவர் அகரப்பத்தனை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய முத்தன் சுதர்ஷன் என பெரும்பாலான ஊடகங்கள் அடையாளம் கண்டிருந்த நிலையில், தமிழ் மிரர் அவரை அக்கரைப்பத்தனை பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய என். சுதர்ஷன் என அடையாளம் காட்டியுள்ளது.
காயமடைந்தவர்கள் கினிகத்தேனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு 49 வயதுடைய வசந்தா கௌரி பலத்த காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருவதாக தமிழ் மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
பொல்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், அப்பகுதியில் பெய்த பலத்த மழையே பாறை சரிந்து விழுந்ததற்குக் காரணம் என சந்தேகிக்கின்றனர்.