காலி கோட்டையில் 17 அரச காணிகள் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு எடுக்கப்பட்டுள்ளமை தணிக்கையில் அம்பலம்
உலக மரபுரிமைச் சின்னமான காலி கோட்டையில் உள்ள 21.8 பேர்ச்ஸ் பரப்பளவிலான 17 அரச காணிகள் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை மீளப்பெற நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் 2025ஆம் ஆண்டுக்கான தேசிய கணக்காய்வு அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டையில் உள்ள பல்வேறு அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான 15 பயன்பாடற்ற காணிகள் உற்பத்தி ரீதியாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதையும் கணக்காய்வு வெளிப்படுத்தியுள்ளது. தவறாகப் பயன்படுத்தப்பட்ட சொத்துக்களை அரசாங்கத்திடமோ அல்லது காலி மரபுரிமை நிதியத்திடமோ மீள ஒப்படைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அது பரிந்துரைத்தது.
காலி மரபுரிமை நிதியத்தின் தலைவர் பேராசிரியர் டெவ் மைக்கல் டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், காணிகளைப் பெற்று ஒழுங்குபடுத்துவதற்கான முயற்சிகள் காணித் தீர்வுகள் திணைக்களம் மற்றும் கடுவத்ஸதர பிரதேச செயலகத்தின் மெதுவான பதில்களால் தாமதமடைந்தன என்றார்.
பயன்பாடற்ற காணிகள் மாற்றப்பட்டவுடன் உற்பத்தி ரீதியாகப் பயன்படுத்துவதற்கான திட்டங்கள் தயாராக உள்ளதாகவும், நிதியத்தின் முகாமைத்துவக் குழுவில் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் 26 அரச நிறுவனங்களின் ஆதரவை அவர் வலியுறுத்தினார்.