மன்னார் பெரியபண்டிவிரிச்சான் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல்

மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பெரியபண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை (நவம்பர் 27) மாலை நடைபெற்றது.
பொதுச்சுடர் மாலை 6.05 மணியளவில் மாவீரர் ஒருவரின் தந்தையால் ஏற்றப்பட்டது.
பெற்றோர், உறவினர்கள், முன்னாள் போராளிகள், மதத் தலைவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் மலர் தூவி, ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். மாவீரர் நாள் நினைவேந்தல் குழுவினரால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.