பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 2026 பிரச்சாரத்தை கொழும்பு நடையுடன் இலங்கை ஆரம்பித்துள்ளது

பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் செயற்பாட்டுக்கான 2026 பிரச்சாரத்தை இலங்கை நவம்பர் 25 அன்று ரேஸ் கோர்ஸ் முதல் கொழும்பு மாநகர சபை வரை தேசிய நடையுடன் ஆரம்பித்துள்ளது.
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான மன்றம் ஆகியவற்றுடன் இணைந்து #JusticeIsMyRight: UNiTE Towards Ending GBV என்ற தொனிப்பொருளில் இந்த முன்முயற்சியை முன்னெடுத்தது.
இந்த ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய பெண்கள் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் கலாநிதி நாமல் சுதர்ஷன, நீடித்த நிறுவன ஒத்துழைப்பு மற்றும் வலுவான பாதிக்கப்பட்டோர் ஆதரவு சேவைகளை வழங்குவதற்கு பொது உறுதிமொழிகளுக்கு அப்பால் முயற்சிகள் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார்.
2019 ஆம் ஆண்டு தேசிய பெண்கள் நலன் ஆய்வு அறிக்கையின்படி, இலங்கையில் ஐந்து திருமணமான பெண்களில் ஒருவர் நெருங்கிய துணையால் உடல் ரீதியான அல்லது பாலியல் வன்முறையை அனுபவித்துள்ளார், இருப்பினும் பலர் களங்கம் மற்றும் பயம் காரணமாக முறையான உதவியை நாடுவதைத் தவிர்க்கின்றனர்.