மொனராகலை ஐந்து குடும்பங்கள் காணி மறுப்பால் வீடுகளை மீளக்கட்ட முடியாமல் தவிப்பு

மொனராகலை, மதுருகெட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவில் ஐந்து குடும்பங்கள், திட்வா அனர்த்தத்தால் தமது வீடுகள் முழுமையாக அழிந்ததையடுத்து வீடற்றவர்களாக உள்ளதாக இடம்பெயர்ந்தவரான தேவேந்திரன் மோகனாஸ்வரி தெரிவித்தார்.
வீடமைப்பு புனரமைப்புக்காக ஒரு வீட்டிற்கு ரூ. 5 மில்லியன் வழங்கப்படவிருந்த போதிலும், நிதியைப் பெறுவதற்கு காணி உரிமைக்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
எனினும், மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை, குடும்பங்கள் முன்னர் வசித்த குமாரவத்த தோட்டத்தில் காணி ஒதுக்க மறுத்துவிட்டதால், அவர்களால் வீடுகளை மீளக்கட்ட முடியவில்லை.
தற்போது தற்காலிக மண் குடிசையில் வசிக்கும் மோகனாஸ்வரி, தமது வீடுகளைக் கட்டுவதற்கு காணி ஒதுக்குமாறு சபையிடம் கோரிக்கை விடுத்தார்.