மூன்றாம் நடுவர் முறைக்கு முன்னோடி, சிரேஷ்ட கிரிக்கெட் நிர்வாகி மஹிந்த விஜேசிங்க 86 ஆவது வயதில் காலமானார்

சிரேஷ்ட கிரிக்கெட் எழுத்தாளர், நிர்வாகி மற்றும் கண்டுபிடிப்பாளரான மஹிந்த விஜேசிங்க தனது 86 ஆவது வயதில் காலமானார்.
விஜேசிங்க 1982 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வெளியான ஒரு கட்டுரையில் மூன்றாம் நடுவர் கருத்தை முன்வைத்து, கள நடுவர்கள் தொலைக்காட்சி மறுஒளிபரப்புகளைப் பார்க்கும் களத்திற்கு வெளியே உள்ள அதிகாரியுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். இலங்கை கிரிக்கெட் சபை 1984 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் சபைக்கு இந்த முன்மொழிவை சமர்ப்பித்தது.
முத்தையா முரளிதரனின் கையை மூடுவதற்கு ஒரு விசேட பிரேஸை உருவாக்கவும் அவர் உதவினார். சுழற்பந்து வீச்சாளர் தனது முழங்கையை நேராக்காமல் பந்து வீச முடியும் என்பதை நிரூபித்தார். அத்துடன், வலைப்பின்னல் கொண்ட விக்கெட் காப்பு கையுறைகளை தடை செய்ய மேரிலேபோன் கிரிக்கெட் கழகத்திற்கு வெற்றிகரமாக மனு அளித்தார்.
விஜேசிங்க இதற்கு முன்னர் 1981 ஆம் ஆண்டு முதல் இலங்கை கிரிக்கெட் நிதியத்தின் முதல் நிறைவேற்றுச் செயலாளராகப் பணியாற்றினார், ப்ளூம்பீல்ட் அணிக்காக முதல் தர கிரிக்கெட்டில் விளையாடினார், மேலும் ‘கிரிக்கெட் காவல்கேட்’ என்ற பத்திரிகை பத்தியை எழுதினார்.