சிறைவாசம் அனுபவிக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அவசர மருத்துவ சிகிச்சை கோரிக்கை

சிறைவாசம் அனுபவிக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தனது மற்றும் தனது மனைவி புஷ்ரா பீபியின் உடல்நிலை மோசமடைந்து வருவதாகக் கூறி அவசர மருத்துவ சிகிச்சை கோரியுள்ளார்.
தனது வழக்கறிஞர் சல்மான் சஃப்தர் வெளியிட்ட கடிதத்தில், தான் உயிருடன் திரும்ப மாட்டேன் என்று அஞ்சுவதாக கான் குறிப்பிட்டுள்ளார். மூளை இரத்தக் கசிவு மற்றும் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதாகவும், தனது இதயம் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் எச்சரித்ததாக அவர் எழுதியுள்ளார்.
ஏப்ரல் மாதம் விழித்திரை பிரிந்ததைத் தொடர்ந்து மேலதிக அறுவை சிகிச்சை செய்யப்படாவிட்டால் தனது மனைவிக்கு கண்பார்வை இழக்க நேரிடும் என்று கான் கூறினார். கானின் வலது கண்ணில் பெரும்பாலான பார்வை இழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் கூறுவதாக டெய்லி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்லாமாபாத் அதிகாரிகள், கானை மருத்துவர்கள் வாராந்திர அடிப்படையில் பரிசோதிப்பதாகவும், அவரது உடல்நிலை திருப்திகரமாக இருப்பதாக மதிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். கான் ஆகஸ்ட் 2023 முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், பீபி கடந்த ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.