பங்களாதேஷ் விவசாயப் பல்கலைக்கழகம் 12 கல்வியாளர்களை நீக்கியது அல்லது இடைநிறுத்தியது; அரசியல் பழிவாங்கல்கள் எனத் தகவல்

பங்களாதேஷ் விவசாயப் பல்கலைக்கழக அதிகாரிகள் 12 கல்வியாளர்களை நீக்கியுள்ளனர் அல்லது இடைநிறுத்தியுள்ளனர். மேலும், 34 பேரைத் தரமிறக்கியுள்ளனர். இது ஒரு விசாரணை ஆணைக்குழுவின் பின்னர் இடம்பெற்றுள்ளது என ஆசியா லைட் செய்திச் சேவை மேற்கோள் காட்டிய அறிக்கை தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது அவாமி லீக் கட்சியுடன் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்ட கல்வியாளர்களும் மாணவர்களும் பங்களாதேஷின் அரச பல்கலைக்கழகங்கள் முழுவதும் தொடர்ச்சியான அரசியல் பழிவாங்கலை எதிர்கொள்கின்றனர் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.
கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம், டாக்கா பல்கலைக்கழகம் மூன்று பேராசிரியர்களை இடைநிறுத்தியது. 2024 மாணவர் போராட்டங்களின் போது அவர்களின் நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகளை மறுபரிசீலனை செய்வதற்காக இது இடம்பெற்றது. இந்தக் குற்றச்சாட்டுகளை அந்தக் கல்வியாளர்கள் மறுத்தனர்.
டாக்கா பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியர் மஷியூர் ரஹ்மான் தொலைக்காட்சியில் போராட்டங்களை சட்டவிரோதமானது என்று அழைத்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாகவும் விசாரணை தொடங்கப்பட்டது. இருப்பினும், பங்களாதேஷ் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு நிகழ்ச்சியின் பதிவில் அத்தகைய அறிக்கையைக் கண்டறியவில்லை.