தெற்காசிய கால்பந்து சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் நவம்பர் 17 அன்று மோதல்

தெற்காசிய கால்பந்து சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நவம்பர் 17 அன்று இலங்கை நேரம் இரவு 7:30 மணிக்கு டாக்காவின் தேசிய விளையாட்டரங்கில் சந்திக்கவுள்ளன.
போட்டியின் 33 வருட வரலாற்றில் முதல் தடவையாக பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. பங்களாதேஷ் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்குத் தெரிவானது. நடப்புச் சம்பியன்களான இந்திய அணி பூட்டானை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
சம்பியன் அணிக்கு 50,000 அமெரிக்க டொலர்களும், இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு 25,000 அமெரிக்க டொலர்களும் வழங்கப்படும். பங்களாதேஷ் அணி வெளியேறியதால் பார்வையாளர்களின் ஆர்வம் குறைந்ததையடுத்து, ஏற்பாட்டாளர்கள் டிக்கெட் விலையை 1,000 டாக்காவிளிருந்து 200 டாக்காவாக ஐந்து மடங்கு குறைத்துள்ளனர்.
பங்களாதேஷ் அணியின் தோல்வியைத் தொடர்ந்து பார்வையாளர்கள் விளையாட்டரங்குகளுக்கு தீ வைத்ததால், பொலிஸ் கலவரக் கட்டுப்பாட்டுப் பிரிவுகள் குவிக்கப்பட்டன. பாகிஸ்தான் அணியில் அணித்தலைவர் அப்துல் இக்பால் மற்றும் அரையிறுதிப் போட்டியில் கோல் அடித்த அப்துல் சமத் உட்பட டென்மார்க்கைச் சேர்ந்த ஒன்பது இரட்டைக் குடியுரிமை வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.