புகையிலை, மதுபானச் செலவுகள் வரி வருவாயை விட 202 பில்லியன் ரூபாவால் அதிகம் – NATA

இலங்கையில் மதுபானம் மற்றும் புகையிலையால் ஏற்படும் சுகாதார மற்றும் பொருளாதார இழப்புகள் 549 பில்லியன் ரூபாவை எட்டியுள்ளதாக தேசிய புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான அதிகார சபையின் (NATA) தலைவர் ஆனந்த ரத்நாயக்க நாடாளுமன்ற உபகுழுவிடம் தெரிவித்தார்.
NATA இன் படி, இந்தச் செலவுகள் வரி வருவாயாக சேகரிக்கப்பட்ட 346.9 பில்லியன் ரூபாவை விட 202 பில்லியன் ரூபாவுக்கு அதிகமாகும்.
நாட்டில் தினமும் 60 உயிர்களை புகைத்தல் காவு கொள்வதாகவும் அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது.