மருத்துவமனை தட்டுப்பாடுகளுக்கு மத்தியில் UNDP மூலம் மருந்துகளைப் பெற NMRA ஏற்பாடு

மருத்துவமனைகளில் நிலவும் மருந்துத் தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்காக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் (UNDP) மூலம் சில மருந்துகளைப் பெறுவதற்கு தேசிய ஒளடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபை (NMRA) நடவடிக்கை எடுத்துள்ளதாக NMRA தலைவர் கலாநிதி ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
இந்த மருந்துகளுக்கான கேள்விப்பத்திரங்களுக்கு எந்தவொரு ஏலதாரரும் பதிலளிக்காததால், விநியோகஸ்தர்கள் இல்லாததே தட்டுப்பாடுகளுக்கு முக்கிய காரணம் என்று கலாநிதி விஜேவிக்ரம கூறினார்.
அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளரின் முன்முயற்சியைத் தொடர்ந்து, சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் UNDP மூலம் கொள்முதல் செய்வது தொடர்பான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டன, தற்போது அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
உலக சுகாதார ஸ்தாபனத்தால் அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தி வசதிகளிலிருந்து மருந்துகள் பெறப்படும்.