வரி நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் உள்ளீட்டு வரிக் கோரல் காலங்களை சீராக்க அரசாங்கம் முன்மொழிவு

கடுமையான நடைமுறைத் தேவைகள் காரணமாக, தொழில்நுட்ப ரீதியான இணக்கமின்மையால் வரி செலுத்துவோர் நியாயமான மீள் கொடுப்பனவுகள் அல்லது உள்ளீட்டு வரிக் கடன்களை இழந்துள்ளனர் என்பதை 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.
நியாயமான, வெளிப்படையான மற்றும் வினைத்திறனான வரி நிர்வாக அமைப்பை உருவாக்குவதற்காக தெளிவின்மைகளை நீக்குவதற்கும், மாறிவரும் வணிக நடைமுறைகளுக்கு இடமளிப்பதற்கும் அது முன்மொழிந்தது.
இலக்கு வைக்கப்பட்ட திருத்தங்களின் கீழ், உள்ளூர் கொள்வனவுகளுக்கு சீரான 12 மாத காலப்பகுதியிலும், இறக்குமதிகளுக்கு 24 மாத காலப்பகுதியிலும் உள்ளீட்டு வரியைக் கோர முடியும்.
ஆணையாளர் நாயகத்திற்கு வலுவான அமுலாக்கல் கருவிகள் கிடைத்துள்ள நிலையில், வரி செலுத்துவோரின் பாதுகாப்பிற்காக ஒரு சுயாதீன வரி ஒம்புட்ஸ்மனை நிறுவுமாறும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.