AFP வாடிக்கையாளர் தளமான AFP Forum இணையத் தாக்குதலால் முடக்கம்
உலகளாவிய செய்தி நிறுவனமான Agence France-Presse (AFP) இணையத் தாக்குதலைத் தொடர்ந்து அதன் AFP Forum உள்ளடக்கத் தளத்தை முடக்கியுள்ளது.
வியாழக்கிழமை அதிகாலை 1:30 மணிக்கு பாரிஸ் நேரப்படி இந்தத் தாக்குதல் தொடங்கியதாகவும், உள்ளடக்கத்தைப் பார்வையிடவும் பதிவிறக்கவும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் தளத்தை இலக்காகக் கொண்டதாகவும் முகாமைத்துவம் தெரிவித்துள்ளது. ஊடுருவலைக் கட்டுப்படுத்த குழுக்கள் உடனடியாகச் செயற்பட்டன.
இந்தச் சம்பவத்தின் சூழ்நிலைகள் மற்றும் பின்னணியில் இருந்தவர்கள் குறித்து AFP விசாரித்து வருகிறது. அடுத்த அறிவித்தல் வரை இந்தத் தளம் கிடைக்காது, மேலும் அது முடக்கப்பட்டிருக்கும் போது சந்தாதாரர்களுக்கு மாற்றுத் தீர்வுகளை நிறுவனம் வழங்கி வருகிறது.