இலங்கை மற்றும் மாலைதீவு சுகாதார மற்றும் ஊடக ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து கலந்துரையாடல்

இலங்கையின் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாத் ஆகியோர் சுகாதார மற்றும் ஊடகத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து கலந்துரையாட நவம்பர் 27 அன்று சந்தித்தனர்.
சுகாதார நிபுணத்துவத்தைப் பகிர்ந்துகொள்வது, சுகாதார நிபுணர்களின் திறன்களை மேம்படுத்துவது, அத்தியாவசிய மருந்துகளை வழங்குவது மற்றும் சேவைத் தரம் மற்றும் அணுகலை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடல்கள் கவனம் செலுத்தின. இரு தரப்பினரும் தங்கள் மக்களுக்கு இடையில் பரஸ்பர புரிதலை வளர்ப்பதற்காக ஊடக அறிவைப் பரிமாறிக்கொள்வது குறித்தும் விவாதித்தனர்.
அக்டோபர் மாதம் மாலைதீவுக்கு ரூ. 5 மில்லியனுக்கும் அதிகமான பெறுமதியான அத்தியாவசிய மருந்துகளை நன்கொடையாக வழங்கியமைக்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் இலங்கைக்கு உயர்ஸ்தானிகர் இமாத் நன்றி தெரிவித்தார்.
சுகாதார அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜாசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி அசேல குணவர்தன மற்றும் மாலைதீவு உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.