ஹோர்முஸ் நீரிணைக்கு அருகில் எண்ணெய்த் தாங்கிக் கப்பலில் தீ; சவூதி தாக்குதல்களுக்கு ஹூத்திகள் உரிமை கோரல்

ஹோர்முஸ் நீரிணைக்கு கிழக்கே கடற்படை கண்ணிவெடியில் சிக்கிய பின்னர் எண்ணெய்த் தாங்கிக் கப்பல் ஒன்றில் தீப்பற்றியதாக ஈரானிய கடற்படை தெரிவித்துள்ளது.
இதேவேளை, சவூதி அரேபியாவில் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து கடந்த 48 மணி நேரத்தில் நடத்தப்பட்ட ஐந்து தாக்குதல்களுக்கு யேமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.
ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம், அல்-ஷுகைக் மற்றும் ஜிசான் ஆகிய இடங்களில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் ஆகியவை தமது இலக்குகளில் அடங்குவதாக ஹூத்திகள் தெரிவித்தனர். உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்த மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை.