மூளைச்சாவு அடைந்த 19 வயது இளைஞனின் இதயம் 14 வயது சிறுவனுக்கு கொழும்பில் சத்திரசிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் இருந்த 14 வயது சிறுவனுக்கு 19 வயது தினுக சந்துருவனின் இதயம் வெற்றிகரமாக சத்திரசிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது.
சந்துருவன் 2026 நவம்பர் 23 அன்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தைத் தொடர்ந்து கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து அவரது பெற்றோர் அவரது உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.
2026 நவம்பர் 26 அன்று, பலத்த மழை காரணமாக விமானப்படை ஹெலிகொப்டர் உறுப்பை கொண்டு செல்ல முடியாமல் போனது. இதனால் பொலிஸ் பாதுகாப்புடன் கூடிய அம்புலன்ஸ் வண்டி 45 நிமிடங்களில் வீதி மார்க்கமாக இதயத்தை கொண்டு சென்றது.
சந்துருவனின் இறுதிச் சடங்குகள் 2026 நவம்பர் 29 அன்று நடைபெறவுள்ளன.