2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 97 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

ஒரு வார கால விவாதத்தைத் தொடர்ந்து, 2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பை பாராளுமன்றம் நவம்பர் 20 அன்று 97 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றியது.
மாலை 6.50 மணியளவில் நடைபெற்ற வாக்கெடுப்பில், 2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 157 வாக்குகள் பதிவாகின. வாக்கெடுப்பின் போது இலங்கைத் தமிழரசுக் கட்சி (ITAK) எதிர்க்கட்சியுடன் இணைந்தது.