2027 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளின் கீழ் 2042ஆம் ஆண்டளவில் முழுமையான பசுமை வலுசக்தியை இலங்கை இலக்கு வைத்துள்ளது

2042ஆம் ஆண்டளவில் 100% பசுமை வலுசக்தியை அடைவதற்கும், நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தியை படிப்படியாக நிறுத்துவதற்கும் இலங்கை அரசாங்கத்தின் 2027 வரவுசெலவுத் திட்டம் திட்டமிட்டுள்ளது.
மொத்த நிறுவப்பட்ட வலுசக்தி திறனில் சுமார் 62% ஆக உள்ள புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை 2029ஆம் ஆண்டளவில் 69% ஆக அதிகரிக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது. இதன் மூலம் இறக்குமதி செய்யப்படும் எரிபொருட்களுக்கான வெளிநாட்டு நாணயச் செலவினங்கள் குறைக்கப்படும்.
மின்கல சேமிப்புடன் கூடிய வீட்டு கூரை சூரிய சக்தி கட்டமைப்புகளுக்கு ரூ. 250,000 வரையான மானியங்களை வழங்குவதற்காக ரூ. 3,500 மில்லியன் வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடு செய்யப்படும். இறக்குமதி செய்யப்படும் சூரிய சக்தி மின்கலங்களுக்கான துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரியும் நீக்கப்பட்டுள்ளது.
10 நீர்த்தேக்கங்களில் 500 மெகாவாட் மிதக்கும் சூரிய சக்தி திட்டங்களை அபிவிருத்தி செய்வதற்காக பொது-தனியார் பங்காளித்துவத்தின் கீழ் 2027 ஜனவரியில் கேள்விப்பத்திரங்கள் கோரப்படவுள்ளன.
மேலும், 2029ஆம் ஆண்டளவில் 370 மெகாவாட் காற்றாலை வலுசக்தி சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், அதிக பாவனையுள்ள 300,000 உள்நாட்டு நுகர்வோருக்கான ஸ்மார்ட் மீட்டர்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் 12 மில்லியன் அமெரிக்க டொலர் மானியம் நிதியளிக்கும்.