2024இலிருந்து 2,481 இலங்கை அதிகாரிகளுக்கு சீனா 380 பயிற்சித் திட்டங்களை வழங்கியுள்ளது

2024இற்கும் 2026இற்கும் இடையில் 2,481 இலங்கை அரசாங்க அதிகாரிகளுக்கு சீனா 380 பயிற்சித் திட்டங்களை வழங்கியுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற பழைய மாணவர் வரவேற்பு நிகழ்வில் உரையாற்றிய கலாநிதி பெர்னாண்டோ, வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் ஊடாக 2026ஆம் ஆண்டில் 57 இருதரப்பு மற்றும் பல்தரப்பு நிகழ்ச்சித் திட்டங்களில் 700க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்றதாகக் கூறினார்.
சீனாவின் வர்த்தக அமைச்சு, முன்னணி சீனப் பல்கலைக்கழகங்களில் அரச அதிகாரிகள் முதுமாணி மற்றும் கலாநிதிப் பட்டங்களைப் பெறுவதற்கு புலமைப்பரிசில்களையும் வழங்கியது.
பயிற்சி எண்ணிக்கையை மட்டும் கொண்டு அளவிடாமல், பொதுச் சேவைகள் மற்றும் நிறுவனங்களில் ஏற்படும் முன்னேற்றங்களால் இந்தத் திட்டங்களின் வெற்றி அளவிடப்பட வேண்டும் என்று கலாநிதி பெர்னாண்டோ வலியுறுத்தினார்.