பாடசாலை மாணவர்களுக்கு இலவச கண்ணாடிகளை வழங்க 100 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி முன்மொழிந்தார்

2026 நவம்பர் 12 அன்று 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பித்தபோது, பாடசாலை மாணவர்களுக்கு இலவச கண்ணாடிகளை வழங்குவதற்காக 100 மில்லியன் ரூபாவை ஒதுக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முன்மொழிந்தார்.
பார்வைக் குறைபாடுகள் காரணமாக கல்விச் செயற்பாடுகள் தடைப்படக்கூடிய பாடசாலை மாணவர்களுக்கு ஆதரவளிப்பதே இந்த ஒதுக்கீட்டின் நோக்கமாகும்.