திங்கட்கிழமை நடைபெறவுள்ள நாடு தழுவிய தொழிற்சங்க வேலைநிறுத்தத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பங்கேற்கவுள்ளது

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதி திங்கட்கிழமை பல தொழிற்சங்கங்களால் நடத்தப்படவுள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் இணையத் தீர்மானித்துள்ளது.
வேலைநிறுத்தத்தில் பங்கேற்பது குறித்து தீர்மானிப்பதற்காக நவம்பர் 27ஆம் திகதி காலை நடைபெற்ற விசேட செயற்குழுக் கூட்டத்தைத் தொடர்ந்தே சங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.