தேவந்திரமுனைக்கு தெற்கே போதைப்பொருட்களுடன் சென்ற கப்பலை கடற்படையினர் வழிமறித்து ஈரானிய பிரஜைகளை கைது செய்தனர்

இலங்கை கடற்படையினர் 2026 நவம்பர் 27 அன்று தேவந்திரமுனைக்கு தெற்கே கொடியற்ற பலநாள் மீன்பிடிக் கப்பல் ஒன்றை வழிமறித்து, அதிலிருந்த அனைத்து கடத்தல்காரர்களையும் கைது செய்தனர். அவர்கள் ஈரானிய பிரஜைகள் என அடையாளம் காணப்பட்டனர்.
இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்கு அப்பால் கப்பலை வழிமறித்தபோது சந்தேகநபர்கள் பெரும் போதைப்பொருள் தொகையை கடலுக்குள் வீசியதை அடுத்து, கடற்படையினர் சுமார் 5 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளை கைப்பற்றினர்.
கடற்படையின் தகவல்படி, சந்தேகநபர்கள் தெற்கில் உள்ள முக்கிய உள்ளூர் கடத்தல்காரர்களிடம் ஒப்படைப்பதற்காக இந்த போதைப்பொருளை கொண்டு சென்றனர்.
மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக கப்பல் மற்றும் சந்தேகநபர்கள் நவம்பர் 27 அன்று கரைக்கு கொண்டுவரப்பட்டு பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.