வெளிநாடுகளில் இருந்து நாடு கடத்தப்பட்ட பாலியல் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க மகளிர் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் அழைப்பு

வெளிநாடுகளில் பாலியல் குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டு, பின்னர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட இலங்கையர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மகளிர் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில் நடைபெற்ற அதன் உபகுழுவுடனான கூட்டுக்கூட்டத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்களை அடுத்து, இந்த நபர்கள் பொருத்தமான சட்ட மற்றும் கண்காணிப்பு பொறிமுறைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என ஒன்றியம் வலியுறுத்தியது.