கொழும்புக்கு வெளியே சட்டவிரோதமாக குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி செயலகம் சுற்றாடல் பொலிஸாரை பணித்தது

கொழும்பு மாநகர சபை எல்லைக்கு வெளியே வீதிகள் மற்றும் வடிகால்களில் குப்பைகளை கொட்டும் குடும்பங்களுக்கு எதிராக சிசிரிவி காணொளிக் காட்சிகளைப் பயன்படுத்தி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி செயலகம் சுற்றாடல் பொலிஸாருக்கு பணித்துள்ளது.
பொறுப்பற்ற முறையில் குப்பைகளை கொட்டுவதும், அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களும் அண்மைய திடீர் வெள்ளப்பெருக்குக்குக் காரணம் என்று கொழும்பு பிரதி மேயர் ஹேமந்த குமார தெரிவித்தார். சபை ஊழியர்களை நியமித்து வருவதாகவும், வடிகால் சுத்திகரிப்புக்கான ஒப்பந்தப்புள்ளிகளை கோரியுள்ளதாகவும், சட்டவிரோத கட்டுமானங்களை இடித்து வருவதாகவும் அவர் கூறினார்.
வடிகால் அமைப்புகளைப் பராமரிப்பதில் ஏற்பட்ட அலட்சியமே நகரின் அண்மைய வெள்ளப்பெருக்குக்கு முக்கிய காரணம் என்று பொது நிர்வாகம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச்.எம். அபேரத்ன நவம்பர் 13 அன்று பாராளுமன்றத்தில் தெரிவித்ததை அடுத்து அவரது கருத்துக்கள் வெளியாகியுள்ளன.