அரச வைத்தியசாலைகளில் 1,819 வைத்தியர்களுக்கான பற்றாக்குறை: சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தகவல்

அரச வைத்தியசாலைகளில் 136 விசேட வைத்தியர்கள் உட்பட 1,819 வைத்தியர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ நவம்பர் 17ஆம் திகதி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
விசேட வைத்தியர்கள் அல்லாத 1,683 வைத்தியர்களுக்கான பற்றாக்குறை நிலவுகிறது. அங்கீகரிக்கப்பட்ட 2,903 விசேட வைத்தியர் பதவிநிலைகளுக்கு எதிராக தற்போது 2,767 விசேட வைத்தியர்கள் சேவையாற்றுவதாக ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
விசேட வைத்தியர்களுக்கான 2,903 பதவிநிலைகளையும், ஏனைய வைத்தியர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட 23,353 பதவிநிலைகளையும் ‘தி ஐலண்ட்’ பத்திரிகை குறிப்பிட்டிருந்த அதேவேளை, ‘அருண’ பத்திரிகை 2,903 என்ற எண்ணிக்கையை பொதுவாக வைத்தியர்களுக்கானதாக குறிப்பிட்டிருந்தது.
அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 7,000 வைத்தியர் வெற்றிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.