இந்திய உற்பத்தி முதலீடுகளை ஈர்க்க இலங்கைக்கு குறுகிய கால அவகாசமே உள்ளது: இலங்கை வர்த்தக சம்மேளனம் எச்சரிக்கை

இந்தியாவிலிருந்து உற்பத்தி முதலீடுகளை ஈர்ப்பதற்கு இலங்கைக்கு ஒன்று முதல் இரண்டு வருட கால அவகாசமே உள்ளது என இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷிரான் பெர்னாண்டோ எச்சரித்துள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கி மன்றத்தில் உரையாற்றிய பெர்னாண்டோ, அதிக செயற்பாட்டுச் செலவுகள் மற்றும் தாமதமான உள்நாட்டுச் சீர்திருத்தங்கள் இந்த வாய்ப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகத் தெரிவித்தார்.
2026 ஏப்ரல் முதல், சம்மேளனம் சுமார் 15 வர்த்தகக் குழுக்களுக்கு வசதி செய்துள்ளது. இதில் 50% முதல் 60% வரையான குழுக்கள் இந்தியாவிளிருந்தும், பிராந்திய மற்றும் மாநில அளவிலான வர்த்தகக் குழுக்களும் அடங்கும்.
இருப்பினும், வருகை தந்த இந்திய பாதணிகள் ஏற்றுமதியாளர் ஒருவர், தொழிலாளர், நிதி மற்றும் செயற்பாட்டுச் செலவுகள் காரணமாக இலங்கையின் உற்பத்திச் செலவுகள் 25% முதல் 30% வரை அதிகமாக இருப்பதைக் கண்டறிந்தார்.
2 மில்லியன் டொலர் முதல் 3 மில்லியன் டொலர் வரையிலான சாத்தியமான முதலீடுகளைப் பெறுவதற்கு மின்சாரச் செலவுகள் மற்றும் தொழிலாளர் ஒழுங்குமுறைகளில் துரிதப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்களை பெர்னாண்டோ வலியுறுத்தினார்.