கொட்டடுவ பாடசாலை மைதானத்தில் நவம்பர் 28-29 ஆம் திகதிகளில் ஐம்பது வயதுக்கு மேற்பட்டோருக்கான இரண்டு கிரிக்கெட் சுற்றுப்போட்டிகள்
கொழும்பு வெலுவனா கல்லூரி, நாலந்தா கல்லூரி மற்றும் கொட்டடுவ மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த ஐம்பது வயதுக்கு மேற்பட்ட வீரர்களுக்கான ஒரு நட்பு ரீதியான கிரிக்கெட் சுற்றுப்போட்டி நவம்பர் 28 ஆம் திகதி கொட்டடுவ பாடசாலை மைதானத்தில் நடைபெறவுள்ளது.
வெலுவனா '86 அணியினரும் கொட்டடுவ பிளாக் பந்தர்ஸ் லெஜண்ட்ஸ் அணியினரும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ஐம்பது வயதுக்கு மேற்பட்டோருக்கான அகில இலங்கை சுற்றுப்போட்டி நவம்பர் 29 ஆம் திகதி காலை 9:30 மணிக்கு அதே மைதானத்தில் நடைபெறவுள்ளது.