ஆசியான் உடனான உறவுகளை மறுபரிசீலனை செய்வதாக மியன்மாரின் மின் ஆங் ஹ்லைங் தெரிவிப்பு

மியன்மாரின் இராணுவ ஆதரவுடைய ஜனாதிபதி மின் ஆங் ஹ்லைங், தனது நிர்வாகம் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்துடனான (ஆசியான்) உறவை மறுபரிசீலனை செய்வதாக 2026 நவம்பர் 18 அன்று தெரிவித்தார்.
இருப்பினும், பிராந்திய கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளுடன் கலந்துரையாடல்கள் தொடரும் என்றும் அவர் மேலும் கூறினார்.
மியன்மாரின் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான நீண்டகால திட்டத்தில் முன்னேற்றம் ஏற்பட்டால், அதன் முழு அரசியல் பிரதிநிதித்துவத்தை படிப்படியாக மீட்டெடுப்பதைக் கருத்தில் கொள்ளலாம் என்று ஆசியான் தலைவர்கள் அண்மையில் குறிப்பிட்டிருந்தனர்.