இந்திய விமானங்களுக்கான வான்பரப்பு தடையை 2026 டிசம்பர் 24 வரை நீடித்தது பாகிஸ்தான்

தொடர்ச்சியான அரசியல் மற்றும் பாதுகாப்பு பதட்டங்களுக்கு மத்தியில், பாகிஸ்தான் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை, பாகிஸ்தான் வான்பரப்பைப் பயன்படுத்தும் இந்திய விமானங்களுக்கான தடையை 2026 டிசம்பர் 24 ஆம் திகதி அதிகாலை 4:59 மணி வரை நீடித்துள்ளது.
2025 ஏப்ரல் 23 ஆம் திகதி முதன்முதலில் அமுல்படுத்தப்பட்ட இந்த கட்டுப்பாடு, இந்தியப் பதிவு செய்யப்பட்ட அனைத்து வர்த்தக, பயணிகள் மற்றும் இராணுவ விமானங்களுக்கும் தடை விதிக்கிறது. இந்தியா பின்னர் 2025 ஏப்ரல் 30 ஆம் திகதி பாகிஸ்தான் விமான நிறுவனங்களுக்கான தனது வான்பரப்பை மூடியது.
இந்த நடவடிக்கைகள், இந்திய நிர்வாகத்திற்குட்பட்ட காஷ்மீரில் 2025 ஏப்ரலில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து, 2025 மே மாதத்தில் எல்லை தாண்டிய தாக்குதல்களாக அதிகரித்தன. பின்னர் இரு நாடுகளும் அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன.
வான்பரப்பு மூடல் இந்திய விமான நிறுவனங்களை நீண்ட மாற்றுப் பாதைகளில் அதிக இயக்கச் செலவுகளுடன் செயல்பட கட்டாயப்படுத்தியுள்ளது. அதேசமயம் பாகிஸ்தானின் விமானப் போக்குவரத்துத் துறையில் பொருளாதார தாக்கம் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது.